மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ப்ரதீப்… தயாரிக்க போவது யார்?

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:04 IST)
லவ் டுடே படத்தின் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் ப்ரதீப் ரங்கநாதன்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திலும் பிரதீப் தானே ஹீரோவாக நடிக்கும் முடிவை எடுத்துள்ளாராம். இந்த படத்தையும் லவ் டுடே படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்