சிவாகார்த்திகேயன் பட ஷூட்டிங் நிறுத்தம்… காஷ்மீரில் இருந்து திரும்பிய படக்குழு!

Webdunia
வியாழன், 18 மே 2023 (08:18 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இப்போது மாவீரன் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைக்களம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் காஷ்மீர் பின்னணியில் ராணுவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் ஷூட்டிங் மே 5 ஆம் தேதி பூஜையோடு தொடங்கியது. இதையடுத்து காஷ்மீரில் படக்குழு சில நாட்களாக முகாமிட்டு ஷூட்டிங்கை நடத்திய நிலையில் இப்போது பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு சென்னைக்கு திரும்பியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்