நடிகை அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலருக்கு அபராதம்!

Webdunia
புதன், 17 மே 2023 (22:48 IST)
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலர்  ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தியுள்ளார்.

இந்தி சினிமாவில் பிரபல நடிகை அமிதாப் பச்சன் தன் காரில் சென்று கொண்டிருந்தபோது, மிகுந்த போக்குவரத்து நெரிசல் மாட்டிக்கொண்டதால், அருகில் நின்றிருந்த ஒருவரிடம் பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்றார். அந்த பைக்கின் பின்னால் அமிதாப் பச்சன் பயணிக்கும் புகைப்படம் வைரலானது.

இதுகுறித்து, அமிதாப் பச்சன் 'தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த நபருக்கு என் நன்றிகள்' என்று  தன் சமூகதலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இருவரும் ஹெல்மெட் அணியாததற்கு பலரும் விமர்சித்திருந்த நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறையின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனிஷ்கா சர்மா தன் பாதுகாவலருடன் பைக்கில் ஷூட்டிங்கிற்குச் செல்லும் வீடியோ வைரலானது,

இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதற்காக அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலருக்கு ரூ.10,500 அபராதம் விதித்துள்ளது மும்பை போக்குவரத்துக் காவல்துறை.  'சாலைவிதியை மீறியதற்கான  அபராதம் செலுத்தப்பட்டுவிட்டதாக' போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்