தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன்… லோகேஷ் போடும் திட்டம்!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறாது என சமீபத்தில் லோகேஷ் ஒரு நேர்கணலில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். அதற்குள் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து லோகேஷ் படத்துக்கு தயாராகி விடுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்