விஜய்யின் ஜாதகத்தை வைத்து பூஜை செய்த எஸ்.ஏ சி?

புதன், 8 நவம்பர் 2023 (13:46 IST)
திருச்சியில் உள்ள கோயிலுக்குச் சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் தன் குடும்பத்தினரின் ஜாதகத்தை வைத்து  பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லியோ.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது. இதன் வசூலை அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  நடிகர் விஜய் அரசியலில் வர ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர் விரைவில் அரசியல் வரும் நடவடிக்கையாகத்தான் தன்  மக்கள் இயகத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் மற்றும் சுத்தரத்னேஷ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது தன் குடும்பத்தினரின் ஜாதகத்தை வைத்து அவர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

கோயில்  நிர்வாகம் சார்பில் எஸ்.ஏ.சிகு மரியாதை செய்யபட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்