விஜய்யின் 'லியோ' வெளிநாடுகளில் ரூ.200 கோடி வசூல்!

புதன், 8 நவம்பர் 2023 (21:04 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி  வெளியாகி வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றி  விழா கடந்த 1 ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில், விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.

இப்படம் ஒரு வாரத்தில் மிகப்பெரிய வசூல் குவித்து சாதனை படைத்த நிலையில், இப்படம் இதுவரை ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் விரைவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  விஜய்யின் லியோ படம் வெளி நாடுகளில் ரூ. 201 கோடி வசூல் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்  ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

#LEO’s bloody sweet box office overseas with $24.2 million (₹201 cr). 2 words: THALAPATHY

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்