சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (09:02 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டு இருந்தாலும் அந்த தேதியில் ’ஆர்.ஆர்.ஆர்.’  திரைப்படம் ரிலீஸ் ஆவதால் சிவகார்த்திகேயன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவார் என்று கூறப்பட்டது 
 
மேலும் ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை ரிலீஸ் செய்யும் லைக்கா நிறுவனம்தான் ‘டான்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் என்பதால் கண்டிப்பாக ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 13 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறியுள்ளனர்
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்