பிரபாஸின் ஆதிபுருஷ் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

செவ்வாய், 1 மார்ச் 2022 (08:03 IST)
பிரபாஸின் ஆதிபுருஷ் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ஆதிபுருஷ் என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபாஸ் உள்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிராபிக்ஸ் பணிகள் என வெவ்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்