அமரன் படத்துக்கு ஆரம்பப் புள்ளி அந்த புத்தகம்தான்… இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தகவல்!

vinoth
சனி, 24 பிப்ரவரி 2024 (11:34 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசரில் இருந்து இது காஷ்மீர் தீவிரவாதிகளின் கதை என்றும் காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த படம் எப்படி தொடங்கப்பட்டது என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசியுள்ளார்.  அதில் “ரங்கூன் படத்துக்கு பிறகு வேறு ஒரு படம் கமிட்டாகி ஷூட்டிங் செல்லும் நேரத்தில் தடைபட்டது. அப்போது என் நண்பர் ஒருவர் மூலமாக “The Most Fearless” என்ற புத்தகம் பற்றி கேள்விப்பட்டேன். அதில் இந்தியாவுக்கா வீரதீர செயல்கள் புரிந்தவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன என்று சொன்னார். அதில் சென்னையைச் சேர்ந்த கேப்டன் முகுந்த் வரதராஜன் பற்றி இருப்பதாகவும் சொன்னார். அதுதான் இந்த படத்துக்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்