என் போட்டோக்களைப் பார்த்துவிட்டு சினிமா உலகில் பலர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள்… கிரண் வேதனை!

vinoth
சனி, 24 பிப்ரவரி 2024 (11:25 IST)
விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.. கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட கிரண் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “நான் வாழ்க்கையில் ஒருவரை காதலித்தேன். அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை. பலரும் எனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என சொல்கிறார்கள்.ஆனால் அன்றிரவே படுக்கைக்கு அழைத்து மெஸேஜ் அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நான் பகிரும் புகைப்படங்கள்தான் என புரிந்து கொண்டேன். நான் ஒன்றும் ஆபாச படத்தில் நடிக்கவில்லை. எனக்கு பிடித்த ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்கிறேன். சினிமாவில் யாருமே நண்பர்கள் இல்லை என்று புரிந்துகொண்டேன்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்