“உங்க படத்த ரீமேக் பண்ணி நடிக்கணும்னா…” சிம்புவின் கேள்விக்கு கமல் பதில்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (13:21 IST)
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது.

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னை பல்லாவரத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் பட ஆடியோ விழாவில் சிம்பு கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு கமலிடம், “நான் உங்கள் படங்களில் ஏதாவது ஒன்றை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்றால் எந்த படத்தை சொல்வீர்கள்” எனக் கேட்க, அதற்குக் கமல் “நீங்கள் என்னோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும்” எனக் கூறி பதிலளித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்