வேட்டையாடு விளையாடு பார்ட் 2 பத்தி மேடையிலேயே பேசிய கமல்…கௌதம் மேனனின் பதில்!

ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (08:45 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னை பல்லாவரத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் ஏற்கனவே ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அதற்கு தூபம் போடுவது போல கமல் இந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது “இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த வேட்டையாடு விளையாடு2 பற்றி கௌதம் கூறினார். நான் அவரிடம் கதைக் கேட்டு வருகிறேன். இன்னும் கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக பின்னர் பேசிய கௌதம் “சார் எழுத்தாளர் ஜெயமோகன் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார். அது முடிந்ததும் உங்களிடம் வருகிறேன்” எனக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்