நாளை வெளியாகிறது பத்து தல படத்தின் கிளிம்ப்ஸ்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (09:35 IST)
பத்து தல படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் சிம்பு இல்லாத காட்சிகளை எல்லாம் படமாக்கி முடித்துள்ளார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.

இந்நிலையில் நாளை சிம்புவின் சிம்புவின் 39 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாம். சிம்பு நடித்த சில காட்சிகளைக் கொண்டு இந்த கிளிம்ப்ஸ் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்