கேஜிஎப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சுதா கொங்கரா இப்போது இந்தியில் சூரரைப் போற்று ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்து பாராட்டுகளைக் குவித்து வரும் காந்தாரா படத்துக்காக கேக் அனுப்பி வாழ்த்தி இருந்தார் சிம்பு. இதன் மூலம் இந்த கூட்டணி இணைவதற்காக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.