சிம்பு படத்தில் கமல்ஹாசனா? தேசிங் பெரியசாமி போடும் ஸ்கெட்ச்!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:46 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைத் தயாரிக்கும் கமல்ஹாசன் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்