யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் லக்கின் மேன் டீசர் ரிலீஸ்!

சனி, 29 ஜூலை 2023 (07:21 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் வானவன் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லக்கி மேன் ‘ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் யோகி பாபுவோடு வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகரான பாலாஜி வேணுகோபால் இந்த படத்தை இயக்கியுள்ளார். திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்