சினிமாவுக்கு கதை எழுதிய சித்தார்த்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (15:43 IST)
நடிகரான சித்தார்த், முதன்முறையாக ஒரு படத்துக்கு கதையும் எழுதியிருக்கிறார்.




 
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பிறகு நடிகரானவர் சித்தார்த். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர், சில படங்களைத் தயாரித்துள்ளார். அத்துடன், சில படங்களில் பாடவும் செய்திருக்கிறார். தற்போது, ஒரு படத்துக்கான கதையையும் எழுதியிருக்கிறார்.சித்தார்த், ஆன்ட்ரியா நடித்துள்ள ‘அவள்’ படம்தான் அது. இந்தப் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவுடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார் சித்தார்த். மணிரத்னத்திடம் உதவியாளராக இருக்கும்போதே இருவருக்கும் பழக்கமாம். பல வருடங்களாக இருவரும் சேர்ந்து எழுதியிருக்கும் கதைதான் இது.

தமிழ் ஹாரர் படங்களைப் போல காமெடியாகவோ இந்தப் படம் இருக்காதாம். சமீபத்தில் வெளியான ‘அனபெல்லா’ போல ஹாலிவுட் படங்களுக்கு நிகரான நம்மைப் பயமுறுத்தும் என்கிறார்கள். ‘இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஸீட்டில் இருந்து நீங்கள் குதிப்பது நிச்சயம்’ என்கிறார் இயக்குநர் மிலிந்த் ராவ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்