'பிச்சைக்காரன்' இயக்குனருக்கு கிடைத்த ஜல்லிக்கட்டு டைட்டில்

புதன், 20 செப்டம்பர் 2017 (22:47 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிகரமாக நடந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் ஜல்லிக்கட்டு குறித்தே அதிக திரைப்படங்களை எடுத்து வருகின்றனர். விஜய்யின் 'மெர்சல்', விஜய்சேதுபதியின் 'கருப்பன்' உள்பட மொத்தம் ஐந்து திரைப்படங்கள் ஜல்லிக்கட்டு குறித்து உருவாகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு ஜல்லிக்கட்டு படம் உருவாகிறது.



 
 
விஜய் ஆண்டனி நடித்த சூப்பர் ஹிட் படமான 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய இயக்குனர் சசி அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ்-சித்தார்த் நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்தது. இந்த படத்திற்கு தற்போது 'ரெட்டை கொம்பு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தின் டைட்டிலில் இருந்தே இது ஜல்லிக்கட்டு படம் என்பது உறுதியாகின்றது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்