“ஆன்ட்ரியா மிகச்சிறந்த டீம் பிளேயர்” – ராம்

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (13:44 IST)
ஆன்ட்ரியா மிகச்சிறந்த டீம் பிளேயர்’ எனப் பாராட்டியுள்ளார் இயக்குநர் ராம்.


 

 
ராம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘தரமணி’. இந்தப் படத்தில், ஸ்ட்ரெய்ட் பார்வர்டு பெண்ணாக போல்டான கேரக்டரில் நடித்திருந்தார் ஆன்ட்ரியா. இந்தப் படம், பல்வேறு தரப்பினரிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ராமின் 10 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக கலெக்ஷன் அள்ளிய படம் இதுதான்.

“மலையாளத்தில் வெளியான ‘அன்னயும் ரசூலும்’, ‘தரமணி’, மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ – இந்த 4 படங்களும் ஆன்ட்ரியாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். ‘வடசென்னை’ படத்தின் சில காட்சிகளை நான் பார்த்துவிட்டேன். அதை இப்போது சொல்ல முடியாது. ஆன்ட்ரியா மிகச்சிறந்த டீம் பிளேயர். புதியவரான வசந்த் ரவிக்கு ஷூட்டிங்கின்போது மிகவும் உதவியாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார் ராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்