யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

vinoth
சனி, 6 ஜூலை 2024 (19:06 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசனை விட அதிக நேரம் வரும் விதமாக சித்தார்த்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்தின் இரண்டாம் பாதியில் தான் இந்தியன் தாத்தா வருவாராம். அதனால் படக்குழுவுடன் இணைந்து சித்தார்த்தும் பல இடங்களில் நேர்காணல் கொடுத்து படத்துக்கு ப்ரமோஷன் செய்து வருகிறார்.

இந்நிலையில் சித்தார்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஷங்கர் சார் இந்தியன் 2, இந்தியன் 3 ஆகிய படங்களை மட்டும் இயக்கவில்லை. அதே நேரத்தில் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் என்ற பிரம்மாண்ட படத்தையும் இயக்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங்கில் ஆயிரக்கணக்கானவர்களை வேலை வாங்குவதோடு மட்டுமில்லாமல் புதிய புதிய தொழில்நுட்பக் கருவிகளையும் பயன்படுத்தி வந்தார். வேறு யாருக்காகவும் இந்த படம் ஓடுவதைக் காட்டிலும் அவருக்காக முதலில் ஓட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்