சந்திரமுகி2, இறைவன் பட கலெக்‌ஷன்களை முந்திய சித்தா… 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (07:40 IST)
சித்தார்த் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தைக் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் பார்த்து பாராட்டி பேசி இருந்தது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

படமும் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்துள்ள நிலையில், கடந்த வாரம் ரிலீஸான படங்களில் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. சித்தா படத்தோடு ரிலீசான சந்திரமுகி 2 மற்றும் இறைவன் ஆகிய ஒரு படங்களும் மோசமான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், அந்த படங்களின் வசூலை சித்தா முந்தியுள்ளது.

5 நாட்களில் சித்தா திரைப்படம் 11.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்