விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட காமெடி நடிகர்

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:01 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் விஜய். இவர் நடிப்பில்  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  உருவாகவுள்ள படம் 'விஜய்68'.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில், இப்பட டெஸ்ட் ஷூட்டிங் அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில்,  நேற்று, விஜய்68 பட பூஜை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த  நிகழ்ச்சியில், விஜய், சினேகா, லைலா, பிரசாந்த், வைபவ்,வெங்கட்பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர. இப்படம் ஒரு குடும்பப் படம் என்ற தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே விஜயுடன் பைரவா, கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் சதீஸ்  விஜய் 68 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது சதீஸ் ஹீரோவாகியுள்ளதால் அவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகும் நிலையில், சதீஸ் இப்படி கூறியதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்