இந்த படத்தைப் பார்த்த கமல்ஹாசன் அதைப் பாராட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் “நான் சித்தா படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு அம்மா என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவர்கள் மனதில் பதிய ஒரு கதை சொல்லவேண்டும். இறுதியில் அழுத்தத்தோடு செல்லாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொல்லி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.
பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்ற வித்தியாசம் இல்லாமல் அவர்களை நாம் குழந்தைகளாகவே பார்க்கவேண்டும். இந்த படத்துக்கு மகாநதி படம்தான் ஒரு உந்துதல் என்று படக்குழுவினர் சொன்னார்கள்.அப்படி என்றால் எனக்கு மகாநதியை விட இந்த படம் பிடித்திருக்கிறது.” எனக் கூறியிருந்தார்.