சிபிராஜ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:25 IST)
நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சிபிராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ரங்கா’. இந்த படம் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் அதன் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து இந்த படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்