நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

Siva

ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (10:23 IST)
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, அவ்வப்போது ஹீரோ வேடத்திலும் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல நடிகர் யோகி பாபு காரில் பயணித்த போது, கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக யோகி பாபுவுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அவர் வேறு காரில் பெங்களூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடிகர் யோகி பாபுவின் கார் விபத்து குறித்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், அவர் பாதிப்பு ஏதுமின்றி உயிர் தப்பிய செய்தி மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்