சிபிராஜின் ‘மாயோன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (11:07 IST)
சிபிராஜின் ‘மாயோன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிபிராஜின் ‘மாயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிபிராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாயோன்’ படத்திற்கு சமீபத்தில் சென்சார் சான்றிதழ் கிடைத்தது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் அளித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
ஆள் அரவமற்ற ஒரு கோவிலில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அந்த நிகழ்வுகளை கண்காணிக்க செல்லும் கூட்டத்திற்கு நடந்த பயங்கரம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ‘மாயோன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்