கொத்தவரங்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா....?

சனி, 9 ஏப்ரல் 2022 (09:30 IST)
கொத்தவரங்காய் ஜூஸ் வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பதால் பல தொற்று நோய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள நமக்கு உதவுகிறது.


கொத்தவரங்காய் ஜூஸ் குடிப்பதனால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்து சீர்படுத்துகிறது. கொத்தவரங்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை குறைத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது.

சரும பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்கள்,கருவளையம் போன்றவற்றை சரிசெய்து முகத்திற்கு நல்ல பொலிவை தருகிறது.

செரிமான பிரச்சினைக்களுக்கு சரிசெய்து உணவுகளை எளிதில் சீரணிக்கக்கூடிய தன்மை பெற்றுள்ளது. அனிமிக் போன்ற பிரச்சினைகளை சரி செய்வது, கிட்னியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

வயிற்றில் தங்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை சரிசெய்து கேன்சர் போன்ற நோய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. முக்கியமாக முடக்குவாதம் உள்ளவர்கள் கண்டிப்பாக வாரத்தில் இரண்டுமுறை இந்த ஜூஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் நல்ல பயனை கொடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் இரண்டு முறை எடுப்பதன் மூலம் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி கை கால் வலிகளையும் சரிசெய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்