இந்த பாய் பிரண்டையும் துரத்த போகும் ஸ்ருதி ஹாசன் - அப்பறோம் எதுக்கு காதல்?

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:02 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
 
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழுந்து ஒருவரை பிரேக்கப் செய்தார். தற்போது மீண்டும் ராப் பாடகர் சந்தானு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். doodle artist ஆன காதலன் தனது வயிற்றில் வரைந்த வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வைரலானது.
 
அதையடுத்து " நீங்க எப்போ கல்யாணம் செய்துக்கொள்வீர்? என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன்,  " நான் நேர்மையாக கூறுகிறேன், நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நினைக்கிறேன். இதிலிருந்து நாம் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நேரம் உலகில் பல அழுத்தமான சிக்கல்களும், கொழுந்துவிட்டு எரியும் கேள்விகளும் உள்ளன என்று கூறியுள்ளார். கல்யாணம் பண்ணாததுக்கு எதுக்கு காதல்? பாவம் அந்த காதலன்... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்