விஜய் அரசியல் வருகை பற்றிய கேள்வி… அவரது தாய் ஷோபா அளித்த பதில்!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (14:54 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. விஜய்யை பார்க்க சென்ற சந்திரசேகரைக் கூட அவர் பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரம் கோயிலில் வழிபாடு செய்த விஜய்யின் தாயார் ஷோபாவிடம் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்ட போது, அதற்கு அவர் “எனக்கு அதுபற்றி ஒன்னுமே தெரியாது. விஜய் என்ன நினைக்கிறாரோ அதுதான்… கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்