வயாகராக்காக இந்திய எல்லைக்குள் நுழைந்தனரா சீன வீரர்கள்??

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:19 IST)
சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் இமாலயன் வயாகரா என்று அழைப்படும் மூலிகைக்காக வந்ததாக கூறப்படுகிறது.


இந்தியா – சீனா இடையே கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பின் எல்லைப்பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. சீனா எல்லைப்பகுதியில் குடியேற்றங்களை அதிகப்படுத்தி வரும் நிலையில் இந்தியாவும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லைப்பகுதியில் 200 சீன வீரர்கள் நுழைந்துள்ளனர். அவர்களை இந்திய ராணுவத்தின் 50 பேர் கொண்ட குழு எதிர்கொண்ட நிலையில் இதுகுறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இரண்டாவதாக ஒரு குழுவும் எல்லைப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு சீன ராணுவ வீரர்களும், இந்திய வீரர்களும் துப்பாக்கிகளை உபயோகிக்காமல் கட்டைகளாலும், கைகளாலும் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமான இந்திய வீரர்கள் இருந்ததால் சீன வீரர்கள் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் எல்லைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்பாக இதனைவிட பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் இமாலயன் வயாகரா என்று அழைப்படும் மூலிகைக்காக வந்ததாக கூறப்படுகிறது. இந்த இமாலயன் வயாகரா தங்கத்தை விட விலை மதிக்கத்தக்கது. அதாவது சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.10 - ரூ.17 லட்சம் விலை மதிப்பு கொண்டது. 

நுரையீரல், பெருங்குடல், தோல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் உட்பட பல வகையான மனித புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது தடுப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு அரவியல் சான்றுகள் இல்லையென்றாலும் இதற்கான தேவை சீனாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்