போலீஸ் விசாரணையின்போது கணவரை திட்டிய ஷில்பா ஷெட்டி!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (14:34 IST)
ஆபாசபட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டி இடம் சமீபத்தில் போலீசார் விசாரணை செய்தனர்
 
ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பாவுக்க்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் தனது கணவர் ராஜ் குந்த்ராவை கடுமையாக தாக்கியதாக போலீஸ் அதிகாரியின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது 
 
தான் இத்தனை வருடங்களாக சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயர் ஒரே நாளில் மோசமாகி விட்டதாகவும் தன்னை நம்பி தனது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது விலகி விட்டதாகவும் இந்த ஒரு சம்பவத்தால் தனது பேரும் புகழும் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் இதற்கெல்லாம் காரணம் தனது கணவர் தான் என்றும் உணர்ச்சி வசப்பட்டு அவரை திட்டியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆபாச செயலியில் தனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த செயலி செயல்பட தனது கணவர் முதலீடு மட்டுமே செய்ததாகவும் ஷில்பா ஷெட்டி கூறியதாக தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்