ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 3 நாட்கள் போலிஸ் காவல் அளித்து சிறையில் அடைத்துள்ளது.