ஷங்கர் பட கதாநாயகி வாய்ப்பு… இரண்டு தமிழ் நடிகைகள் இடையே போட்டி!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:01 IST)
இயக்குனர் ஷங்கர் ராம்சரண் தேஜாவை வைத்து இயக்கும் படத்தில் பிரியா பவானி சங்கர் அல்லது மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது மாளவிகா மோகனன் அல்லது பிரியா பவானி சங்கர் ஆகியவர்களில் ஒருவர் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. பிரியா பவானி சங்கர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்