தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இந்நிலையில் மார்கன் பட நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி “கடவுளே வந்து நடித்தாலும் எந்த படம் கதை மற்றும் இயக்கம் சரியாக இல்லை என்றால் ஓடாது. குரங்கு, கழுதையை வைத்துக் கூட படம் எடுத்து அது ஹிட்டாகியுள்ளது. அதனால் எந்த படமும் ஹீரோவால் ஓடுவதில்லை.” எனப் பேசியுள்ளார்.