ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு பயங்கரமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று இணையத்தில் ட்ரோல் ஆனது. படுமோசமான வசூலைப் பெற்று தோல்விப் படமாக அமைந்தது. இதனால் ராம்சரணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார்.