அட்லி இயக்கியதில் இந்த படங்கள்தான் பிடிக்கும்…. ரசிகரின் கேள்விக்கு ஷாருக் கான் பதில்

Webdunia
திங்கள், 8 மே 2023 (08:27 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஷாருக் கான் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு நேரடியாக பதிலளுக்கும் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ஒரு ரசிகர்கள் “அட்லி இயக்கிய முந்தைய படங்களை பார்த்துள்ளீர்களா? அதில் எந்த படம் உங்களுக்கு பிடிக்கும்?” எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஷாருக்கான் “தெறி மற்றும் மெர்சல் படங்கள் எனக்குப் பிடிக்கும். ஜவான் திரைப்படமும்தான்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்