விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (18:42 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த படத்தில் விஜய்யின் சகோதரர் விக்ராந்த் இணைந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தில் ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் நடித்த சபீர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே இந்த படத்தில் ’துப்பாக்கி’ படத்தின் வில்லன் வித்யூத் ஜாம்வால் வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாகவும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்