10 அடியில் இருந்து குதிக்க சொன்னால் 15 அடியில் இருந்து குதிக்கட்டுமா எனக் கேட்பார் – சூரி குறித்து வெற்றிமாறன்!

vinoth

வெள்ளி, 14 ஜூன் 2024 (17:08 IST)
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றது. இதையடுத்து  நடித்துள்ள கருடன் திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த படம் இதுவரை 40 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இணை தயாரிப்பாளரான வெற்றிமாறனும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் “கிடைத்த வாய்ப்பை 100 சதவீதம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கக் கூடாது என நினைப்பவர் சூரி.  அது இயக்குனர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று.  ஷூட்டிங்கில் 10 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்றால் 15 அடி உயரத்தில் இருந்து குதிக்கவா எனக் கேட்பார். இயக்குனரை ஈர்ப்பதற்கு எப்போதும் அவர் தயாராக இருப்பார். கேமரா முன்னால் கதாபாத்திரத்தை உள்வாங்கி இருக்க முயற்சிக்கிறார். அதை மேலும் வளர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்