குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. இதையடுத்து அந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த ஒரு படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் டைட்டில் “டூரிஸ்ட் பேமிலி” என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் பேசும் குடும்பம் ஒன்று ஊரைவிட்டு ரகசியமாகக் கிளம்புவது போலவும் அதில் நடக்கும் சொதப்பல்களுமாக அந்த டீசர் கவனம் பெற்றது.