சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

vinoth

ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:30 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பிஜு மேனன் மற்றும் வித்யுத் ஜமால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதையடுத்து இப்போது நடிகர் விக்ராந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை இடைவெளியே இன்றி நடத்தி வருகிறார் முருகதாஸ். இந்த படத்தை இயக்கும்போதே அவர் இடையில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்