சீனுராமசாமியின் அடுத்த பட பூஜை… பிரபல ஹீரோ பகிர்ந்த தகவல்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (15:17 IST)
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

விஜய்சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில்  தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து உருவான படம் மாமனிதன்.

2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா – இளையராஜா இருவரும் தயாரித்து, இசையமைத்தனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, விருதுகளும் குவித்தது.

இதையடுத்து இயக்குனர் சீனுராமசாமி ஜி வி பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் அதன் பின்னர் அவர் மெஹந்தி சர்க்கஸ் நாயகன் ரங்கராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

இதுபற்றி ரங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில் “சீனு ராமசாமி அண்ணனுடன் நான் இணையும் எனது அடுத்த படத்தின் அலுவலக பூஜை இன்று நடைபெற்றது. மெஹந்தி சர்க்கஸ் போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்