சர்தார் 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து.. ஷூட்டிங் நிறுத்தம்!

vinoth
செவ்வாய், 4 மார்ச் 2025 (10:36 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு அதில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் எஸ் ஜே சூர்யா பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் மைசூரில் நடந்த படப்பிடிப்பின் போது கார்த்திக்கு காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. கார்த்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லி பரிந்துரைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்