சூரியை வைத்து வெப் சீரிஸ் இயக்கும் விக்ரம் சுகுமாரன்!

vinoth

செவ்வாய், 4 மார்ச் 2025 (15:20 IST)
மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். அந்த படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகே இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தனது அடுத்த படமான 'இராவண கோட்டம்' படத்தை சாந்தணுவை வைத்து இயக்கினார். அந்த படம் பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் விக்ரம் சுகுமாரன் அடுத்த படம் இயக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் சூரியை வைத்து ஒரு வெப் சீரிஸை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த தொடருக்கானக் கதையை நடிகர் சூரியே எழுதியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தான் நடித்த கருடன் மற்றும் மாமன் ஆகிய படங்களின் கதைகளிலும் சூரி பங்களிப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்