வசூலில் பின் தங்கிய கஸ்டடி… கிண்டல் செய்து ரசிக்கும் சமந்தா ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 15 மே 2023 (14:45 IST)
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது.காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கு பக்கம் ஒதுங்கியுள்ள இந்த படத்துக்கு தமிழ் சினிமாவிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் வெங்கட்பிரபுவின் கடைசி படமான மாநாடு படத்தின் அதிரி புதிரி ஹிட்தான் காரணம். அப்படி நம்பி சென்ற ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியுள்ளதாம் கஸ்டடி திரைப்படம். படத்தில் ஒரு நிமிடம் கூட ரசிக்கும் படியாக எதுவுமே இல்லையாம். வழக்கமாக வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பாடல்கள் ஹிட்டாகும். இந்த முறை இந்த கூட்டணியோடு இளையராஜா சேர்ந்தும் கூட பாடல்களும் ஹிட்டாகவில்லை என்பது ரசிகர்களுக்கு கூடுதல் வேதனை.

இந்த படம் தெலுங்கிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. உலகளவில் இந்த படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. அதையடுத்து விடுமுறை நாட்களிலும் வசூலில் பெரிய முன்னேற்றம் இல்லை.

இந்நிலையில் சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தாவின் ரசிகர்கள் கஸ்டடி படத்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.  ஏனென்றால் சகுந்தலம் படத்தின் முதல் நாள் வசூல் தொகையைக் கூட கஸ்டடி படம் எட்டவில்லையாம். சகுந்தலா படமும் தோல்விப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்