அக்கட தேசத்தில் கிளாமர் கதாநாயகிகளை பின்னுக்குத் தள்ளிய சாய்பல்லவி!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:27 IST)
தெலுங்கு சினிமாவில் சில படங்களிலேயே நடித்திருக்கும் சாய் பல்லவி முன்னணி கதாநாயகிகளை விட அதிக சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இந்த படத்தை மெஹர் ரமேஷ்  இயக்க தமிழில் தயாரித்த ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம்சரணும் தயாரிக்க உள்ளார். இப்போது அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்து தனது கெட் அப்பை மாற்றியுள்ளார்.

இந்நிலையில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது அதற்கான விடைக் கிடைத்துள்ளது. பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவிதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க சாய்பல்லவிக்கு பெரும் தொகை ஒன்று சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த தொகை அங்கே கிளாமர் குயின்களாக இருக்கும் முன்னணி நடிகைகளின் சம்பளத்தை விட அதிகமாம். இது அங்குள்ள நடிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்