சுந்தர் சி எப்போதும் ஒரு இசையமைப்பாளர் செட் ஆகிவிட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார். சிற்பி, யுவன் ஷங்கர் ராஜா, இமான் என அந்த வரிசையில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதியோடு பல படங்களில் பணிபுரிந்தார்.
அதோடு நிற்காமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது சுந்தர் சிக்கும் ஆதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களுக்கு ஹிப் ஹாப் ஆதியை விடுத்து வேறு சில இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்.