ஊரடங்கை மீண்டும் கடுமையாக்க வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன், 17 செப்டம்பர் 2020 (14:07 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், ஏழாம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
இருப்பினும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பது போன்றே தெரியவில்லை. பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் தவிர அனைத்தும் இயங்கி வருகின்றன என்பதும் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இதனால் புதுச்சேரியில் ஊரடங்கை கடுமையாக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரியில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஊரடங்கை கடுமையாக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது