லோகேஷ் படத்தை வேண்டாம் என ரஜினி சொன்னது ஏன்? வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:22 IST)
நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருந்த நிலையில் அதில் இப்போது கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர் நேசன்ல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் ஷீட்டிங் முடியாததாலும் லோகேஷ் படம் தொடங்குவது தாமதமாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் திடீரென அந்த படத்தில் கமலே நடித்து தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் ரஜினி ஏன் அந்த கதையில் நடிக்க மறுத்தார் என ஒரு தகவல் கசிந்துள்ளது. ரஜினிக்கு லோகேஷ் சொன்ன கதையில் சில மாற்றுக் கருத்துகள் இருந்தனவாம். மேலும் ரஜினியை சுற்றி இருப்பவர்கள் அந்த கதையில் நடிக்கவேண்டாம் என சொன்னதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இன்னொரு காரணமாக லோகேஷ் சொன்னது பக்கா ஆக்‌ஷன் கதையாம். தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் அந்த கதையை வேண்டாம் என ரஜினி சொன்னதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்