சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!!

வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:57 IST)
சென்னையில் கடந்த சில மாதங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
தமிழகத்தில் 5,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46,633 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேலும், தமிழகத்தில் கொரொனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8559 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 983 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மொத்தம் 1,51,560 பேராக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், தற்போது சென்னையில் கடந்த சில மாதங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது தொற்று பரவலும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது தெரிவந்துள்ளது. அதாவது கொரோனா சிகிச்சையில் செனையில் மொத்தமே 9833  நோயாளிகள் தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்