சகுனி பட இயக்குனர் சங்கர் தயாள் திடீர் மரணம்!

vinoth

வெள்ளி, 20 டிசம்பர் 2024 (07:41 IST)
கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்தை இயக்கியவர் சங்கர் தயாள்.  சகுனி படத்துக்குப் பிறகு வீர தீர சூரன் என்ற படத்தை விஷ்ணு விஷாலை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

அந்த படத்துக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றுக்காக நுங்கம்பாக்கம் வந்திருந்த அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்படுவதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். அவருக்கு வயது 47. அவரின் இந்த திடீர் மரணம் திரையுலகினருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்